திருச்சி, கோலாலம்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: IndiGo Official Twitter Page

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines). இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி ஒரு நேரடி விமான சேவையையும், சென்னை வழியாக நான்கு விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் திரௌபதி முர்மு!

அதேபோல், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை இல்லை. எனினும், தினசரி குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விமான சேவை கோலாலம்பூரில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகிறது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு விமான பயண ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 9,741 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது?- விரிவாகப் பார்ப்போம்!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.