திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘ஏர் ஏசியா’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: AirAsia

இந்தியாவின் திருச்சி, சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சர்வதேச விமான சேவையை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிப்பு!

குறிப்பாக, திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் வழங்கி வருகிறது. இது நேரடி விமான சேவை ஆகும். இந்த வழித்தடத்தில் ஏர்பஸ் 320 என்ற விமானத்தை நிறுவனம் இயக்கி வருகிறது.

குறைந்த கட்டணத்தில் இந்த விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம். இந்த நிலையில், இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை வழங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்?- விரிவான தகவல்!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.