‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: AirAsia

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாள்தோறும் இரண்டு விமான சேவைகளை வழங்கும் ஏர் ஏசியா நிறுவனம், செப்டம்பர் 2- ஆம் தேதி முதல் நாள்தோறும் இரு மார்க்கத்திலும் மூன்று விமான சேவைகளை வழங்கவுள்ளது.

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’ அமைப்பின் விழாவில் காணொளி வாயிலாக கலந்துக் கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்கு குறைந்த பட்ச பயணக் கட்டணமாக ரூபாய் 7,383 நிர்ணயித்துள்ளது. ஏர் ஏசியா நிறுவனம் அனைத்து வழித்தடத்திலும் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது நினைவுக்கூறத்தக்கது.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே ஏர்பஸ் 320 என்ற விமானத்தை இயக்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.