ஏர் ஏசியா நிறுவனம் (Air Asia), திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் வழங்கி வருகிறது. இந்த விமான சேவைக்கு ஏர்பஸ் 320 (AIRBUS 320) என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழித்தட விமான சேவைக்கான கட்டணம் ரூபாய் 7,383 ஆகவும், ரூபாய் 8,183 ஆகவும் என இரண்டு விமான சேவைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் கோலாலம்பூர் வழித்தடத்தில் குறைந்த கட்டணத்தில் ஏர் ஏசியா நிறுவனம் விமானங்களை இயக்கி வருவதால், அதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இரு மார்க்கத்திலும் அதிகரித்து வருவதாக தகவல் கூறுகின்றன.
இந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 2- ஆம் தேதி அன்று முதல் திருச்சி மற்றும் கோலாலம்பூர் வழித்தடத்தில் கூடுதல் விமான சேவை வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 2- ஆம் தேதி முதல் தினசரி மூன்று விமான சேவை வழங்கப்படும். மூன்றாவது விமான சேவை கூடுதல் விமான சேவை ஆகும்.
இந்த கூடுதல் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.