திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: IndiGo Official Twitter Page

திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம். இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும். அதன்படி, திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு 6E 1816 என்ற விமானமும், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 6E 1817 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

“கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு ரூபாய் 8,799 கட்டணத்தில் செல்லலாம்”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 9,081 ஆகவும், கோலாலம்பூரில் இருந்து திருச்சிசெல்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 8,935 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ‘Cabin crew’ பணி…. இன்டர்வியூவில் பங்கேற்க பெண்களுக்கு அழைப்பு!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.