‘திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக ஹனோய்க்கு விமான சேவை’- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

Photo: AirAsia

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக வியட்னாம் நாட்டின் தலைநகர் ஹனோய்க்கு (Hanoi) இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் ஏசியா விமான நிறுவனம் (AirAsia) அறிவித்துள்ளது. வாரத்தில் தினசரி ஒரு விமான சேவையும், குறிப்பிட்ட நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவையை வழங்குகிறது மலிண்டோ ஏர்?- விரிவான தகவல்!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது புதிய ஓடுபாதை!

திருச்சியில் இருந்து ஹனோய்க்கு ஏர் ஏசியா நிறுவனம் விமானங்களை இயக்கி வரும் நிலையில், இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.