திருச்சி, துபாய் இடையேயான ‘இண்டிகோ’ நிறுவனத்தின் நேரடி விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!

Photo: IndiGo Official Twitter Page

இண்டிகோ நிறுவனம், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையையும், சர்வதேச விமான சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘மலின்டோ ஏர்’ நிறுவனத்தின் விமான சேவை!

அதில், குறிப்பாக, திருச்சி, துபாய் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம். இவ்வழித்தடத்தில் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் விமான சேவையை வழங்கி வருகிறது. 6E 28 என்ற விமானம் துபாயில் இருந்து காலை 10.10 AM மணிக்கு புறப்பட்டு, மாலை 04.00 PM மணியை திருச்சியை வந்தடையும். அதேபோல், 6E 27 என்ற விமானம் திருச்சியில் இருந்து மாலை 06.35 PM மணிக்கு புறப்பட்டு, இரவு 09.15 PM மணிக்கு துபாயை வந்தடையும்.

இந்த வழித்தட நேரடி விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/?linkNav=homepage_header என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்.

“திருச்சி, துபாய் இடையே கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

மேலும், திருச்சியில் இருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு வழியாகவும் துபாய்க்கு இரு மார்க்கத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்த்தக்கது.