‘திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக புரூணைக்கு விமான சேவை’- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

Photo: AirAsia

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக புரூணைக்கும், புரூணையில் (Brunei) இருந்து கோலாலம்பூர் வழியாக திருச்சிக்கும் விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் (Air Asia) அறிவித்துள்ளது.

இந்தியாவின் 15- வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்கிறார் திரௌபதி முர்மு!

இந்த வழித்தட விமான சேவை வரும் ஜூலை 25- ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மற்றும் புரூணை இடையே தினசரி இரண்டு விமான சேவைகளை ஏர் ஏசியா நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த வழித்தடத்தில் ஏர்பஸ் 320 விமானங்களை ஏர் ஏசியா நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவுயை தொடங்கியுள்ளது.

விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஆகாஷா ஏர்!

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Trichy International Airport Official Twitter Page