‘திருச்சி, அபுதாபி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி, அபுதாபி இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express). இந்த வழித்தடத்தில் வாரத்தில் ஒருநாள் மட்டும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. திருச்சி மற்றும் அபுதாபி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’ அமைப்பின் விழாவில் காணொளி வாயிலாக கலந்துக் கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு IX 639 என்ற விமானமும், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு IX 640 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.