ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதன்முறையாக களத்தில் முந்திய எதிர்க்கட்சி – ஒரு முழு ரிப்போர்ட்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முந்திய எதிர்க்கட்சி; சரிந்த ஆளும் கட்சி - ஒரு முழு ரிப்போர்ட்
ஊரக உள்ளாட்சி தேர்தல்: முந்திய எதிர்க்கட்சி; சரிந்த ஆளும் கட்சி - ஒரு முழு ரிப்போர்ட்

TN Local Body Election Result: நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இடங்களை கைப்பற்றுவதில் இரு கட்சிகளும் நெருக்கமாகவே வந்தன. என்றாலும் இந்த தேர்தலில் ஆளும் அ.தி. மு.க.வை தி.மு.க. முந்தியது.

கடந்த 20 வருடங்களில் தமிழகத்தில் ஆளும் அரசு ஒன்று, உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவை சந்திப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – ஆன்லைனில் புள்ளி விவரத்துடன் முடிவுகளை பார்ப்பது எப்படி?

மாவட்ட ஊராட்சிகளிலும் (மாவட்ட பஞ்சாயத்து), ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது.

மொத்தம் உள்ள 27 மாவட்ட ஊராட்சிகளில் 14 மாவட்ட ஊராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி. மு.க. 13 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியது.

மாவட்ட ஊராட்சிகள்

அதன்படி தி.மு.க. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தஞ்சை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், நாகை, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 14 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றி உள்ளது.

அ.தி.மு.க. அரியலூர், கரூர், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, தேனி, நாமக்கல், கடலூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, விருதுநகர் ஆகிய 13 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றி இருக்கிறது.

ஊராட்சி ஒன்றியங்கள்

ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தமட்டில், 314 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 5,090 வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. கூட்டணி 2,356 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 2,136 வார்டு உறுப்பினர் இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

அரியலூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 12 இடங்களுக்கான போட்டியில் 11 இடங்களை அதிமுகவும் 1 இடத்தை திமுகவும் வென்றது.

ஈரோடு

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் 19 இடங்களை கொண்ட இந்த மாவட்டத்தில் 14 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கடலூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் :  மொத்தம் உள்ள 29 இடங்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களிலும் திமுக கூட்டணி 14 இடங்களிலும் வெற்றி

கரூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள்  : 12 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 9 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 11 இடங்களில் 6 இடங்களில் அதிமுகவும் 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 23 இடங்களுக்கான போட்டியில் திமுக 15 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.

கோவை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 17 இடங்களுக்கான போட்டியில் அதிமுக 13 இடங்களிலும் திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 16 இடங்களில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும் திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி

சேலம்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 29 இடங்களில் 15 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி, திமுக கூட்டணி 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 28 இடங்களுக்கான போட்டியில் திமுக 23 இடங்களையும், அதிமுக 5 இடங்களையும் கைப்பற்றியது.

தர்மபுரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 18 இடங்களுக்கான போட்டியில் 11 இடங்களில் அதிமுகவும், 7 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

திண்டுக்கல்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 23 இடங்களுக்கான போட்டியில் திமுக 16 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 24 இடங்களில் அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், திமுக கூட்டணி 19 இடங்களிலும் வெற்றி

திருப்பூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 17 இடங்களுக்கான போட்டியில்  13  இடங்களில் அதிமுகவும், திமுக 4 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது.

பி.பி.ஏ. மாணவி; துப்புரவுத் தொழிலாளி; 73 வயது மூதாட்டி – உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி

திருவண்ணாமலை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 34 இடங்களுக்கான போட்டியில் 23 திமுகவும், 10 அதிமுகவும் வென்றுள்ளது.

திருவள்ளூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் 24 பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 19 இடங்களில்  திமுகவும்,  5  இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

திருவாரூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் 18 இடங்களுக்கான தேர்தலில்ல் 14 இடங்களில் திமுகவும் 3 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

தூத்துக்குடி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 17 இடங்களுக்கான போட்டியில் 13 இடங்களில் அதிமுகவும், 4 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

தேனி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 10 இடங்களுக்கான போட்டியில் 8 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றது.

நாகை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 21 இடங்களுக்கான போட்டியில் திமுக 15 இடங்களிலும் 6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

நாமக்கல்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல்  முடிவுகள் :  மொத்தம் 17 இடங்களுக்கான இந்த போட்டியில் அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

நீலகிரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 6 இடங்களில் 5 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

புதுக்கோட்டை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 22 இடங்களுக்கான தேர்தலில் 13 இடங்களில் திமுகவும்9 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

பெரம்பலூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 8 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 7 இடங்களில் திமுகவும், 1 இடத்தில் அதிமுகவும் வெற்றி

மதுரை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 23 இடங்களுக்கான போட்டியில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது.

விருதுநகர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் :  மொத்தம் உள்ள 20 இடங்களுக்கான போட்டியில்  13 அதிமுகவும்  7 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

01:30 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்காக 5067 இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. அதில் திமுக 2318 இடங்களிலும், அதிமுக 2,179 இடங்களிலும், நாம் தமிழர் 1 இடத்திலும், அமமுக 95 இடங்களிலும் பிற கட்சிகள் 437 இடங்களிலும் வெற்றி பெற்றது.

01:30 மணி நிலவரப்படி : மாவட்ட கவுன்சிலர்களுக்கான போட்டி முடிவுகள்

மொத்தம் உள்ள 515 இடங்களுக்கான போட்டியில் திமுக 269 இடங்களிலும், அதிமுக 239 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருவாரூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் :  மொத்தம் உள்ள 18 இடங்களுக்கான தேர்தலில், திமுக 10 இடங்களிலும், அதிமுக 2 இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

மாலை 04:00 மணி நிலவரம்: ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்காக 5067 இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. இதில், திமுக 2336 இடங்களிலும், அதிமுக 2184 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. பிற கட்சிகள் 443 இடங்களிலும், அமமுக 95 இடங்களிலும், நாம் தமிழர் 1 இடத்திலும் வெற்றிப் பெற்றுள்ளன.

அரியலூர் மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் 113

அதிமுக வென்ற இடங்கள் – 35

திமுக வென்ற இடங்கள் – 41

மற்றவை – 31

தேமுதிக – 4

காங்கிரஸ் – 2

கடலூர் மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் – 287

அதிமுக வென்ற இடங்கள் – 109

திமுக வென்ற இடங்கள் – 82

மற்றவை – 75

தேமுதிக – 17

காங்கிரஸ் – 2

பிஜேபி – 2

கரூர் மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் – 115

அதிமுக வென்ற இடங்கள் – 66

திமுக வென்ற இடங்கள் – 33

மற்றவை – 9

காங்கிரஸ் – 3

பிஜேபி – 3

சி.பி.ஐ.(எம்) – 1

கிருஷ்ணகிரி மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் – 221

அதிமுக வென்ற இடங்கள் – 59

திமுக வென்ற இடங்கள் – 88

மற்றவை – 42

தேமுதிக – 9

காங்கிரஸ் – 1

பிஜேபி – 1

சி.பி.ஐ.(எம்) – 1

அரியலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச அம்பிகா

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திரு இரா இராஜேந்திரன்

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு பெ நல்லமுத்து

வார்டு 4 – மற்றவை – திருமதி ப குலக்கொடி

வார்டு 5 – மற்றவை – திருமதி இர வசந்தாமணி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு பொ சந்திரசேகர்

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி க ஷகிலாதேவி

வார்டு 8 – மற்றவை – திரு சே அசோகன் வெற்றி

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு வீ இராஜேந்திரன்

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திரு ம அன்பழகன்

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச தனசெல்வி

வார்டு 12 – தி.மு.க –  திருமதி ஜெ கீதா

கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – சி.பி.ஐ – திரு பி பழனிசாமி

வார்டு 2 – சி.பி.ஐ – திரு ந குமார் (எ) ராஜ்குமார்

வார்டு 3 – தி.மு.க – திருமதி ம மம்தா

வார்டு 4 – தி.மு.க – திருமதி M அனிதா

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு தி ரவிக்குமாா்

வார்டு 6 – சி.பி.ஐ – திரு மா பூதட்டியப்பா

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச விமலா

வார்டு 8 – தி.மு.க – திரு ஷே ஷேக் ரஷீத்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு வெ வெங்கட்டாசலம்(எ)பாபு

வார்டு 10 – தி.மு.க – திருமதி சி இலட்சுமி

வார்டு 11 – தி.மு.க – திருமதி ஜி சசிகலா

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஏ ஜெயா

வார்டு 13 – தி.மு.க – திருமதி எம் ச சித்ரா

வார்டு 14 – தி.மு.க – திருமதி டி கலையரசி

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பி வள்ளி

வார்டு 16 – தி.மு.க – திரு செ பழனி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி கே சங்கீதா

வார்டு 18 – தி.மு.க – திருமதி நா மணிமேகலை நாகராஜன்

வார்டு 19 – தி.மு.க – திருமதி எஸ் வித்யா

வார்டு 20 – தி.மு.க – திரு S சங்கர்

வார்டு 21 – தி.மு.க – திரு P கதிரவன்

வார்டு 22 – மற்றவை – திரு எஸ் மூர்த்தி

வார்டு 23 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சு ரத்தினம்மாள்

கரூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1  – தி.மு.க – திரு த கார்த்திக்

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திருமதி எம் அலமேலு

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு கு சிவானந்தம்

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திரு எம்.எஸ் கண்ணதாசன்

வார்டு 5 – தி.மு.க – திருமதி தி தேன்மொழி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திருமதி P வசந்தா

வார்டு 7 – தி.மு.க – திருமதி த நந்தினிதேவி

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு N முத்துக்குமார்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு எஸ் திருவிகா

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி வி நல்லமுத்து

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பு இந்திரா

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திரு ஆர் ரமேஷ்

கன்னியாகுமரி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 –  இ.தே.கா – திருமதி பி அம்பிளி

வார்டு 2 – இ.தே.கா – திருமதி ஏ செலின் மோி

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு மா பரமேஸ்வரன்

வார்டு 4 – இ.தே.கா – திருமதி கொ லூயிஸ்

வார்டு 5 – பி.ஜே.பி – திரு ப ராஜேஷ் பாபு

வார்டு 6 – இ.தே.கா – திருமதி சி ஜோபி

வார்டு 7 இ.தே.கா – திருமதி தே ஷர்மிளா ஏஞ்சல்

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு சு மொ்லியன்று தாஸ்

வார்டு 9 – பி.ஜே.பி – திரு த சிவகுமாா்

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி எம் ஜாண்சிலின் விஜிலா

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திரு E நீலபெருமாள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க – திருமதி சி தீபா

வார்டு 2 – தி.மு.க – திருமதி ம தமயந்தி

வார்டு 3 – தி.மு.க – திரு த ராஜேந்திரன்

வார்டு 4 – தி.மு.க – திரு சோ கிருஷ்ணமூர்த்தி

வார்டு 5 – தி.மு.க – திரு கா சுந்தரராசன்

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு T ரவிச்சந்திரன்

வார்டு 7 – தி.மு.க – திருமதி த கிருத்திகா

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு கோ ரமேஷ்

வார்டு 9 – தி.மு.க – திருமதி க ஜெயலெட்சுமி

வார்டு 10 – தி.மு.க – திருமதி செ பாலவினோதினி

வார்டு 11 – இ.தே.கா – திருமதி க கிருஷ்ணகுமாாி

வார்டு 12 – தி.மு.க – திருமதி சி வளா்மதி

வார்டு 13 – தி.மு.க – திரு ச கண்ணன்

வார்டு 14 – தி.மு.க – திருமதி சு தீபா

வார்டு 15 – தி.மு.க – திருமதி ர ஆதிநாயகி

வார்டு 16 – தி.மு.க – திரு மு கருணாநிதி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி செ சவாியம்மாள்

வார்டு 18 – தி.மு.க – திருமதி க பாக்கியலட்சுமி

வார்டு 19 – தி.மு.க – திரு ரா சரவணகுமாா்

வார்டு 20 – அ.இ.அ.தி.மு.க – திரு க செல்வராஜ்

வார்டு 21 – தி.மு.க – திருமதி செ தேக்கமலா்

வார்டு 22 – தி.மு.க – திரு அ பாலசுப்ரமணி

வார்டு 23 – தி.மு.க – திரு மு.சி சிவக்குமாா்

வார்டு 24 – அ.இ.அ.தி.மு.க – திரு ரெ இராஜ்மோகன்

தேனி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி க பிாிதா

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திரு M சந்திரசேகரன்

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திருமதி A ஈஸ்வாி

வார்டு 4 – பி.ஜே.பி – திரு பெ இராஜபாண்டியன்

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு கு.க பாண்டியன்

வார்டு 6 – தி.மு.க – திருமதி எம் வளா்மதி

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி நா வசந்தா

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திருமதி U அல்லிதேவி

வார்டு 9 – தி.மு.க – திருமதி ம தமயந்தி

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திரு அ இளம்வழுதி

நாமக்கல் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திரு சு செந்தில்

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பி கனகா

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு சி ரா செல்லப்பன்

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஈ சுகிா்தா

வார்டு 5 – தி.மு.க – திருமதி செ அருள்செல்வி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு பி.ஆர் சுந்தரம்

வார்டு 7 – தி.மு.க – திரு பெ ராஜேந்திரன்

வார்டு 8 – மற்றவை – திரு ச வடிவேலன்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு சீ பிரகாஷ்

வார்டு 10 – தி.மு.க – திருமதி அ ராஜாத்தி

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திரு மு செந்தில்குமார்

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திருமதி R சாரதா

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திருமதி வே பிரேமா

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திருமதி கே இன்பத்தமிழரசி

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திருமதி என் ருத்ராதேவி

வார்டு 16 – தி.மு.க – திருமதி சி விமலா

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சு தவமணி

மேலும் தேர்தல் ஆணையத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.