டிக்டாக் பிரபலங்களின் புதிய கொரோனா ட்ரெண்ட்

டிக்டாக்-ல் உள்ள இந்தியர்கள் உருளைக்கிழங்கை எரிப்பதும், ஜெய் கொரோனா என்று பாடுவதும் போதவில்லை என்று புதிய முயற்சியை கையாண்டுள்ளனர்.

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக பெரும்பாலான இந்தியர்கள் வீட்டிலேயே இருப்பதால், டிக்டாக் படைப்பாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை மேலும் பிரபலமாக்க பல்வேறு வழிகளைக் கொண்டு வருகின்றனர்.

இந்த புதிய டிக்டோக் போக்கில், அவர்கள் உண்மையில் கொரோனா வைரஸாக மாறிவிட்டனர். சிவம் மாலிக் என்ற இளைஞர் இந்த ஒலி அமைப்பை உருவாக்க படிப்படியாக பலர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் நம் கேள்விக்கு கொரோனா பதிலளிப்பது போல் வடிவமைத்துள்ளார். உலகெங்கிலும் வைரஸ் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதற்கான அதன் பதில்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

  • பெயர்: கொரோனா
  • குடும்பப்பெயர்: வைரஸ்
  • புனைப்பெயர்: கோவிட்
  • வயது: 19
  • தாயின் பெயர்: சீனா
  • தற்போதைய காதலன்: அமெரிக்கா
  • முன்னாள் காதலன்: இத்தாலி, ஈரான், ஸ்பெயின்
  • பிடித்தது: இந்தியா

தொடர்ந்து இந்த ஒலி அமைப்பை வைத்து மில்லியன் பேருக்கு மேல் டிக்டாக் செய்வதால், ஏலியன் வடிவ அமைப்பை டிக்டாக் கொண்டுவந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகமாய் இருக்கும் நிலையில் டிக்டாக் பயனர்கள் இந்த முயற்சியை கொண்டு கொரோனாவை பிரபலப்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.