ஒரே ஒரு பயணியுடன் சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற டைகர் ஏர்வேஸ் விமானம்..!

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒரே ஒரு பயணியுடன் டைகர் ஏர்வேஸ் விமானம் சென்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!

இந்நிலையில், அந்த விமானத்தில் போதிய பயணிகள் வராததால் ஒரே ஒருவர் மட்டும் விமானத்தில் பயணித்துள்ளார்.

அதில் பயணம் செய்துவந்த அவர் ஒடிஸாவை சேர்ந்த பயணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் இருந்து சிங்கப்பூர் திரும்ப உள்ள விமானத்தில் 168 பேர் பயணிக்க தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Source : Dinakaran

இதையும் படிங்க : சிங்கப்பூர் திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!