தமிழகத்தில் பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உட்பட 3 பேர் கைது!

தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இதனிடையே, பிளஸ் 2 மாணவர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவியை அந்த மாணவன் கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமது நண்பர்களான சூரியபிரகாஷ், விக்னேஸ்வரன் ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரியபிரகாஷ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தனித் தனியாக சென்று மாணவியை மிரட்டியுள்ளனர். நடந்ததை வெளியில் சொல்லிவிடுவோம் என கூறி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த வாரம் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் பிளஸ் 2 மாணவன் மற்றும் அவர்களது நண்பர்கள் விக்னேஸ்வரன், சூரியபிரகாஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.