COVID-19: இந்தியாவில் அதிகரிக்கும் சம்பவங்கள் – மொத்தம் 31ஆக உயர்வு..!

இந்தியாவில் மேலும் ஒரு நபருக்கு COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (மார்ச் 6) தெரிவித்துள்ளது.

இந்த புதிய நபருடன் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா பாதிப்பு: ‘இந்தியர்களை போல் வணக்கம் சொல்லுங்கள்’ – இஸ்ரேல் பிரதமர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறிலிருந்து 31ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சீனாவில் தோன்றிய இந்த தொற்றுநோய் உலகளவில் சுமார் 100,000க்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட அந்த நபர் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும், இவர் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அவரின் உடல்நிலை சீராகவும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதற்கு முன்னர் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘கொரோனா வைரஸ் நெகட்டிவ்’ – சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி