இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமீரகத்திற்கு வரும் நாளில் எதிர்ச்சையாக நடைபெற உள்ள சிறப்பு வாய்ந்த விழா!!

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று இந்து திருவிழாவான ஜன்மாஷ்டமி விழா நடைபெறவுள்ளது. இது இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகைதரும் நாளன்று எதிர்ச்சையாக ஒத்துப்போகிறது.

“ஆர்டர் ஆப் சயாத்” விருதைப் பெறுவதற்காக வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் பயணமாக மோடி அபுதாபிக்கு வரவிருக்கிறார், என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், போச்சன்ஸ்வாசி அக்ஷர் புர்ஷோட்டம் சுவாமிநாராயண் சாந்தா (BAPS) கோயிலின் ஜன்மாஷ்டமி (கிருஷ்ணரின் பிறந்த நாள்) விழாவில் மோடி கலந்து கொள்வாரா? என்ற இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்விழா 5 முதல் 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கலைநிகழ்ச்சிகள் அதைத் தொடர்ந்து இரவு உணவு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள், கிருஷ்ணரின் கதை மற்றும் விளக்கேற்றும் விழா ஆகியவை நடைபெறும்.

BAPS கோவில் வட்டாரங்கள் கூறுகையில், சுமார் 1,200 க்கும் மேற்பட்டோர் இந்த நாளில் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். ஆனால், மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி இந்த நிகழ்வில் கலந்துகொள்வாரா? என்பது குறித்து எந்தவிதமான தகவலும் தெரியவில்லை. மேலும், நாங்கள் அவருக்கு முறையான அழைப்பை எதுவும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது.