தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்!

Photo: Google Maps

கர்நாடகா மாநிலம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (12/08/2022) பகல் 11.45 மணிக்கு கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 90- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாலத்தீவு நாட்டின் தலைநகர் மாலிக்கு புறப்பட்டது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!

இந்த நிலையில், விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் இருந்த புகை எச்சரிக்கும் அலாரம் ஒலித்தது. இதனால், பயணிகள் மற்றும் விமானிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, கோவை சர்வதேச விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த விமானிகள், விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினர்.

அதைத் தொடர்ந்து, கோவை விமான அதிகாரிகள் விமானத்தை உடனடியாக தரையிக்க அனுமதி அளித்தனர். அத்துடன், விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் உள்பட அவசரகால ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மதியம் 12.57 மணிக்கு விமானிகள் சாதூர்யமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினர்.

“சென்னை, மும்பை இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும்”- ஆகாஷா ஏர் நிறுவனம் அறிவிப்பு!

பின்னர், விமான பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் விமானத்தைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, விமானத்தில் இருந்து புகை எதுவும் வரவில்லை என்பது தெரிய வந்தது. அத்துடன், விமானத்தில் வேறு ஏதேனும் கோளாறு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, பயணிகள் யாரும் விமானத்தைவிட்டு, கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், மதிய உணவு வழங்கப்படாததால் விமான நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இண்டிகோ விமானம் மீது வேகமாக மோதிய கார்!

நீண்ட நேரத்திற்கு பின்னர், விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பயணிகளின் விவரங்களைக் குடியேற்றத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர். அதைத் தொடர்ந்து, பயணிகள் ஓய்வறையில் தங்கினர்.