வெளிநாடுகளில் பெரிய பதவிகளில் தமிழர்கள்

இலங்கையிலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் நிலை பற்றி, ‘காலம்’ என்ற இலக்கிய இதழை, 30 ஆண்டுகளாக நடத்தி வரும் செல்வம்: இலங்கையை விட்டு வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்த எங்களின் துவக்க நாட்கள் மிகவும் சிரமமானவை. மொழி தெரியாமல், பெரிய படிப்பறிவு இல்லாமல், பொருளாதார சிக்கலுடன் தான் வாழ்ந்தோம்.

தங்குவதற்கு அறை கிடைக்காது. கிடைத்தாலும், எங்களின், 10 பேருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில், புலம் பெயர்ந்தவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை இலவசமாக கிடைக்கும். ஆனால், ‘விசா’ வேண்டும். பத்து பேர் இருந்தால், ஐந்து பேருக்குத் தான் விசா இருக்கும்; விசாவை, எங்களுக்குள் சுற்றுக்குள் விட்டு, சிகிச்சை பெற்றுக் கொள்வோம். துவக்கத்தில், மிகச் சாதாரண வேலை தான் கிடைக்கும்; அதுவும் எல்லாருக்கும் கிடைக்காது.

டைமண்ட் பிரின்சஸ் கப்பல் – கொரோனா பாதிப்பு 542 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து யாராவது வந்தால், அடுத்தடுத்து உறவினர்களையும் அழைத்துக் கொள்வோம். உணவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பிரான்ஸ் நாட்டிற்கு வந்த மறுநாள் முதல், இலங்கையில் நாங்கள் உண்ட சோறும், கறியும் தான் சாப்பிடுகிறோம். கனடாவில் நாங்கள் இருக்கும் பகுதியில், வெளியே வெள்ளைக்காரர்கள் போல இருந்தாலும், வீட்டிற்குள் தமிழ் தான் பேசுவோம். ‘டிவி’ பெட்டிகளில், ‘சன் டிவி, விஜய் டிவி’ தான் ஓடிக் கொண்டிருக்கும்; தமிழ் வானொலி தான் ஒலிக்கும்.

யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியில் ஏதேனும் பிரச்னை என்றால், பக்கத்து ஊரில் இருப்பவர்களுக்கு அந்த தகவல் தெரியும் முன்னரே, எங்களுக்கு தெரிந்து விடும். தகவல் தொழில்நுட்பத்தால், அந்த அளவுக்கு உலகம் சுருங்கி விட்டது. எந்த நாட்டுக்கு போனாலும், தமிழர் பண்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கை நிறைய சம்பாதிக்கின்றனர். கனடா, பிரான்சில் உயர்ந்த பதவிகளில் தமிழர்கள் உள்ளனர். கையில் பணப் புழக்கம் அதிகம். இதனால், ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர்.

பூப்புனித நன்னீராட்டு விழாக்களை கூட, வைதீக முறைப்படி நடத்துகின்றனர். எனினும், தமிழில் குழந்தைகளுக்கு, பேச, எழுத தெரியவில்லை. தமிழ் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. விடுதலை புலிகளால் துவங்கப்பட்ட பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும் என்ற இலங்கை அரசின் எண்ணம் நிறைவேறியுள்ளது.எனினும், ஐரோப்பிய நாடுகளில் வலிமையான சமுதாயமாக நாங்கள் உருவெடுத்து வருகிறோம். அது, இலங்கை அரசுக்கு ஒரு விதத்தில் தலைவலி தான்!

கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்காக பெய்ஜிங் தூதரக தொலைபேசி எண்கள் அறிவிப்பு