பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம்பிடித்த சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக இளைஞர்..!

தமிழ்நாடு: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த நிர்வின் பொறியியல் படித்து முடித்த நிலையில் சிங்கப்பூரில் சாஃப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரிஜேன் அல்புரோ என்ற பெண்ணும் நிர்வின் பணியாற்றிய நிறுவனத்திலேயே பணியாற்றி வந்துள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வேலை அனுமதி (Work Pass) பெற்ற இந்தியர் ஒருவர் பாதிப்பு..!

ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய இருவரும் கடந்த மூன்றாண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காத நிலையில் மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, இருவருக்கும் திருப்பரங்குன்றத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் மணப்பெண்ணின் தோழிகள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

உறவினர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்தாலும், பிறகு பெற்றோரின் சம்மதத்தை வாங்கிவிடுவோம் என மணமகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காதலுக்கு கண் தான் இல்லை என்று சொல்வார்கள், ஆனால் இங்கு மொழியே இல்லை என்று நிரூபித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல் நிலையம் முன் தீ விபத்து; தூண்களில் “ISIS” என்று எழுதியிருந்ததாக குற்றச்சாட்டு..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil