ஆஸ்திரேலியாவின் NSW பொதுப் பள்ளிகளில் “தமிழ் மொழி” பாடத்திட்டம்!!

ஆஸ்திரேலியாவின் NSW மாநில பாடசாலைகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இனி தேர்ந்தெடுக்க முடியும். அதற்கான பாடத்திட்டம் வெளியாகி உள்ளது, என NSW கல்வித்துறை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் NSW பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டிய ஐந்து புதிய மொழிகளில் தமிழ் மற்றும் மாசிடோனியன் ஆகியவை அடங்கும்.

மேலும், NSW பொதுப்பள்ளிகளில் மொழி பாடத்திட்டம் இனி கூடுதலாக இந்தி, பஞ்சாபி மற்றும் பாரசீக மொழிகளில் வழங்குவதற்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.