சிங்கப்பூருக்கு பெர்சனல் காரணமாக விரைந்த தமிழக அமைச்சர்! காரணம் என்ன?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து அமெரிக்காவில் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் உள்ளார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ரஷியாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர்.

இன்று(செப்.5) சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக தனிப்பட்ட பயணமாக சி.வி.சண்முகம் வந்திருக்கிறார்.