தமிழ்நாடு: சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர் திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகே முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென தியாகராஜர் கோவில் கோபுரம் மீது ஏறி, அதிக உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் குதித்து ஜெயபால் தற்கொலை செய்துகொண்டார்.
சிங்கப்பூரில் இருந்து ஊர் திரும்பியதில் இருந்தே அவர் மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தெடர்பாக வேறு ஏதேனும் விவகாரம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.