திருச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட 175 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!

கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான போக்குவரத்து தடைபட்டு ஆங்காங்கே மக்கள் தவித்து வந்தனர்.

இதுபோலவே வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களை மீட்டு வர “வந்தே பாரத்” என்ற திட்டத்தை துவங்கிய மத்திய அரசு  கடந்த வியாழக்கிழமை மூன்றாம் கட்டம் துவங்கியது. அதன் மூலம் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 175 பணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

சொந்த ஊருக்கு அழைத்து செல்ல பேருந்துக்கு கட்டணமாக ரூ.1,500 வரை கேட்பதாக புகார் தெரிவித்துள்ளனர். திருவாரூர், பெரம்பலூர், போன்ற ஊர்களுக்கு அரசு பேருந்தில் அழைத்து செல்ல ரூ.1,500 வரை கட்டணம் கேட்பதாக கூறுகின்றனர். கட்டணம் செலுத்த முடியாமல் 3 மணி நேரமாக பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

மேலும், இப்படிப்பட்ட இக்கட்டான கட்டத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அங்குள்ள பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள். Facebook, Twitter