சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை தாளாளர் அவர்களின் மெட்ரிக் பள்ளியில் ‘தமிழில் பேசுவோம்’ வசனம்!

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை தாளாளர் எம்.ஏ. முஸ்தபா அவர்களின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ‘தமிழில் பேசுவோம்’ என்று சுவர் அறிவிப்பு செய்துள்ளார்.

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் முஸ்தபா. ஆம். நாணயமாற்று நிறுவனங்களில் உலக அளவில் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஏசியன் எக்சேஞ்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தும் முஸ்தபா அவர்கள் பிறந்தது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகும்.

இப்பொழுது தொழில் நிமித்தமகாச் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று இருக்கின்றார். பணம் மாற்று (money exchange) உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகின்றார். உலக அளவில் தரமான தங்கம் பற்றி நன்கு அறிந்தவர். தமிழகத்திலும் இவருக்குப் பல நிறுவனங்கள் உண்டு. அடிக்கடித் தமிழகத்திற்கு வந்து தமிழக உறவுகளைப் போற்றி வருகின்றார்.

“தமிழில் பேசுவோம்” என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்ப்பணிபுரியும் இவரின் வாழ்க்கை முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டானதாகும். தன்னுடைய ஆங்கில வழி பள்ளியில் தமிழில் பேசுவோம் என்ற வசனத்தை சுவர் விளம்பரம் அவர் எழுதியுள்ளார்.

இந்த வசனம் அனைத்து தமிழ் மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், என்று கூறும் ஆங்கில வழி பள்ளிகள் மத்தியில், அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக முஸ்தபா அவர்கள் இருப்பது தமிழினத்திற்கு பெருமை.