மும்பையில் பாஜக இளைஞரணித் தலைவரை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்தது ஏன்?

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே சண்முகம் ஒருநாள் பயணமாக டெல்லியில் நடக்கும் Singapore International Arbitration Centre உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார்.

அதற்கு முன்பாக, மும்பையில் உள்ள டாடா & சான்ஸ் நிறுவனத்திற்கு சென்ற அமைச்சர் சண்முகம், அந்நிறுவனத்தின் சேர்மேன் நடராஜன் சந்திரசேகரனுடன் இந்தியா – சிங்கப்பூர் இடையேயான பொருளாதார வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, ரத்தன் டாடாவுடன் மதிய விருந்தில் கலந்து கொண்டார். ரத்தன் டாடா சிங்கப்பூரின் மிகச் சிறந்த நண்பன் என்றும், உலகளவில் டாடா நிறுவனம் இவ்வளவு பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றதற்கான ஒரே காரணம் ரத்தன் டாடா என்று குறிப்பிட்டார்.

தவிர, பாஜக இளைஞர் அணி தலைவர் பூனம் மஹாஜன் மற்றும் துணை தலைவர் மதுகேஷ்வர் தேசாயுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிங்கப்பூர்-இந்தியா உறவு பற்றியும், மக்களிடையே அதிக பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த உறவை எவ்வாறு ஆழப்படுத்தலாம் என்பதையும் பற்றி பேசினோம்’ என்றார்.