சனிப் பெயர்ச்சி எப்போது? வெளிநாட்டில் பணிபுரியும் நீங்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

Sani Payarchi 2020
Sani Payarchi 2020

சனிப் பெயர்ச்சி எப்போது?

பொதுவாக ஜோதிடத்தில் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என இரு வகையான பஞ்சாங்கமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளது.

எங்கு சனி பெயர்ச்சி ஆகிறார்?

சனி பகவான் காலபுருஷ லக்கினமான 9வது இடமான தனுசு ராசியிலிருந்து 10வது இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கமோ, வாக்கிய பஞ்சாங்கமோ எந்த ஜோதிட முறையாக இருந்தாலும் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழைரை சனியில் இது ஜென்மச்சனி காலமாகும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் மருத்துவ செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார். உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி அவரே இரண்டாம் அதிபதி. உங்கள் ராசி அதிபதி உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் நடைபெறும்.

யாருக்கு ஏழரை சனி முடிகிறது?

இந்த சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு ஏழரை சனி முடியப்போகின்றது.
அதே சமயம் கும்ப ராசிக்கு ஏழரை சனி விரய சனியாக செல்லப்போகின்றார்.

வாக்கிய பஞ்சாங்கம்:

வாக்கிய பஞ்சாங்கம் என்பது பழங்காலமாக திருக்கோயில்களில் தற்போது கடைப்பிடித்து வரும் அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட பல்வேறு பஞ்சாங்க ரீதியான விஷயங்களை அடக்கி, ஒரு குரு தன் சிஷ்யனுக்கு சொல்லுவது போன்று வாய் வழியாக இன்று வரை பரிமாறப்பட்டு வந்துள்ள பஞ்சாங்கத்தை குறிப்பதாகும். இது துல்லியமாக்க இருக்குமா என்பது நாம் கூற இயலாது. கணித ரீதியாக இல்லாதது.

திருக்கணித பஞ்சாங்கம்:

பல ஜோதிடர்கள் ஒன்றாக கூடி, கிரகங்கள் எந்த நிலையில், எந்த அமைந்துள்ளன, அவற்றின் பார்வை எந்த கிரகத்தின் மீது உள்ளது என்பதைக் கணித ரீதியாக கணித்து கூறப்பட்டுள்ள பஞ்சாங்கம் தான் திருக்கணித பஞ்சாங்கம்.