வியக்கத்தக்க ‘நெருப்பு வளையம்’ கொண்ட சூரிய கிரகணம் – கண்டு ரசித்த மக்கள்..!

மேற்கு ஆபிரிக்கா, அரேபிய தீபகற்பம், இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வியக்கத்தக்க ‘நெருப்பு வளையம்’ கொண்ட சூரிய கிரகணத்தை பலர் கண்டு ரசித்தனர்.

அதாவது சூரியனை நிலவு மறைக்கும்போது அதைச் சுற்றி ஏற்படும் ஒளி வட்டம் தான் ‘நெருப்பு வளையம்’ என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மற்ற இனத்தை சேர்ந்தவரை தாக்கிப் பேசும் சம்பவம் ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு – அமைச்சர் சண்முகம்..!

அவை ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு வருடங்களும் ஒருமுறை நிகழ்கின்றன.

வடகிழக்கு காங்கோ குடியரசில் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 5.56 மணி முதல் (0456 GMT) சூரிய உதயத்திற்கு சில நிமிடங்களிலேயே “நெருப்பு வளையம்” முதலில் காணப்பட்டது.

இது அதிகபட்சமாக 1 நிமிடம் 22 வினாடிகள் நீடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் தென் அமெரிக்கா பகுதியில் டிசம்பர் 14ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரன் பூமிக்கு சற்று நெருக்கமாக இருப்பதால், அது சூரியனின் ஒளியை முழுவதுமாக தடுக்கும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் மசூதிகளில் ஆன்லைன் முன்பதிவுடன் மீண்டும் தொடங்கும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg