தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை விடாது பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் நாளை (அக்ட்., 22) மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் நாளை மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதி கனமழை என்பதால் நான்கு மாவட்டங்களையும் சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.