‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ – நிகழ்ச்சியில் ரஜினி எதுபற்றி பேசியுள்ளார் தெரியுமா?

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா்.

கொரோனா வைரஸ் பாதிப்பு – சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு வசதிகள் இல்லை

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடா்ந்து சென்னைக்குத் திரும்பிய நடிகா் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஸ்கவரி சேனலின் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தாா்கள். அதனுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பண்டிப்பூர் காட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பெரிய காயம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அங்கே புதா்கள் நிறைய இருந்தன. அதில் இருந்த முள்கள் ஒரு சில இடங்களில் குத்தியது, அவ்வளவுதான் என்றாா்.

படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பியர் கிரில்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்று பியர் கிரில்ஸுக்குப் பாராட்டு தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ரஜினி.

ISRO பயிற்சி முகாமில் இணைய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அரிய வாய்ப்பு!

ரஜினியின் ட்வீட்டைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனம், ரஜினிக்கு நன்றி. ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கான கவுண்ட்டவுன் இத்துடன் ஆரம்பிக்கிறது என்று ரஜினி பட வசனத்தை வைத்து ட்வீட் செய்துள்ளது. மேலும் மற்றொரு ட்வீட்டில், இந்நிகழ்ச்சியில் நீர் பாதுகாப்பு குறித்து ரஜினி பேசியுள்ளதாக அறிவித்துள்ளது.