திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறது…!!

Privatise six more airports: AAI to Centre

திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக்க இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) , விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மையத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த செப்டம்பர் 5ம் தேதி AAI தனது குழு கூட்டத்தில் மேலும் ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. அவை திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர் மற்றும் ராய்ப்பூர்” என்று அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,”வாரியம் இந்த முடிவை எடுத்தவுடன், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது,” என்று கூடுதலாக கூறியுள்ளார்.

ஏற்கனவே லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், மங்களூரு, கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.