உலகின் தொன்மையான மொழி தமிழ் என இந்திய பிரதமர் மோடி பாராட்டு..!!

இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழ்நாடு மாமல்லபுரத்தில் அண்மையில் ஒரு முறைசாரா சந்திப்பு நடத்தினர். இருவரும் அங்குள்ள தமிழ் பாரம்பரிய கலைகளையும், சிற்பங்களையும் கண்டுரசித்தார்.

இந்நிலையில், தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட இந்தி கவிதையை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ் மொழியில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், உலகின் தொன்மையான தமிழ் மொழி மிகவும், அழகானது எனறும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.