21 நாள் ஊரடங்கின் வெளிப்பாடு – இந்தியாவில் PORNHUB பயன்பாடு 95%-ஆக உயர்வு

கொரோனாவுக்கு எதிராக நாடெங்கும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், பலரின் வாழ்க்கை செல்போன், கம்ப்யூட்டர் என்றே நகர்கிறது. கடந்த ஏப்ரல் 02-ம் தேதி பிரபல ஆபாச இணையதளமான பார்ன்-ஹப்(Pornhub) தன் இணையதள போக்குவரத்து விபரத்தை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 02-ம் தேதி வரை, உலகிலேயே இந்தியாவில் தான் நிறைய பேர் பார்ன்-ஹப் இணையத்தளத்தில் ஆபாச படங்கள் பார்த்திருக்கிறார்கள் என்றும், அதிலும் குறிப்பாக ஏப்ரல் 27-ம் தேதி தங்கள் போக்குவரத்து 95%-ஐ தொட்டதாக கூறியுள்ளனர். மேலும், அதற்குப் பின்னர் போக்குவரத்து குறைந்தாலும் 64%-க்கு கீழ் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், தன் இணையத்தளத்தில் பிரீமியம் கணக்குகளை இலவசமாக துவங்க சலுகைகளை வழங்கியுள்ளது, பார்ன்-ஹப் நிறுவனம். முதலில் கொரோனவின் தாக்கம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகமாக இருந்ததால் அனைவரையும் வீட்டிற்குள் பூட்டிவைக்க இலவச பார்ன்-ஹப் கணக்குகளை கொடுத்ததாகவும், பின்னர் இதே முறையை இந்தியாவிலும் கையாண்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

என்னதான் மற்ற நாடுகளில் இந்த சலுகைகளைக் கொடுத்தாலும், அந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிகபேர் எங்கள் தளத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளது பார்ன்-ஹப் நிறுவனம்.

மைண்ட்ஜீக்கிற்கு(MindGeek) சொந்தமான ஆபாச வீடியோ தளம் தன் தொழில்துறையில் பணிபுரியும் நடிகர்களுக்கு உதவி வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது பாலியல் தொழிலாளர்களுக்கு அவுட்ரீச் என்னும் திட்டத்தின்கீழ் $25,000 வழங்கியுள்ளது. மேலும், நியூயார்க்கில் முதலில் பதிலளிக்கும் 15,000 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை முகமூடிகளையும், தீயணைப்பு வீரர்களுக்கு 15,000 அறுவை சிகிச்சை முகமூடிகளையும் வழங்கியுள்ளது.

இதுபற்றி பார்ன்-ஹப் இணையத்தளத்தின் துணைத்தலைவர் கோரே பிரைஸி’ன் செய்திக்குறிப்பின் படி, “இந்த இலவச சந்தாவின் காரணம் என்னவென்றால், அனைவரையும் வீட்டிலேயே இருக்கவைப்பது தான்.
இந்தியாவில், இது செயல்படுவதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.