சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை..!

புதுச்சேரியில் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது, அதை தொடர்ந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டின் மூலம் பல வெளிநாட்டு தொழிலதிபர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா MLA ஆகியோர் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு..!

மேலும், கடந்த நவம்பர் 6ம் தேதி முதலமைச்சர் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்று 4 நாட்கள் முகாமிட்டு புதுவையில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிரபல நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் புதுவைக்கு வந்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டதால் எழுந்த சர்ச்சை – முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம்!

அதை தொடர்ந்து புதுவை சட்டசபையில் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஷாஜகான், சிவா MLA, தொழில்துறை செயலர் ஸ்ரன், இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.