விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக உழைப்பாளர்களுக்கு ஒரு ரோல் மாடலாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த மாற் றுத்திறனாளி பாண்டியராஜன் என்பவர் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை செய்து அசத்தி வருகிறார்.
செப்.2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாண்டியராஜன் தன்னுடைய வலது கை மட்டுமே பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக சிலைகளை வடிவமைத்து வருகிறார். அவர் தயாரிக்கும் சிலையின் நேர்த்தியை பார்த்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிறவியிலேயே இவருக்கு இடது கை ஊனம். சீசனுக்கு ஏற்ப பானை, அடுப்பு, ஜாடி, சாமி சிலைகள், விளக் குகள், குதிரைகள், பொம்மை, முளைப்பாரி சட்டி, உண்டியல் உள்ளிட்ட மண்பாண்டப் பொருட் களை செய்து வருகின்றனர்.
மேலும், சிலைகளின் உயரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கிறோம். 3 அடியில் இருந்து 5 அடி வரை அடிக்கு ரூ.1,800-ம், 5 அடிக்கு மேல் இருந்தால் அடிக்கு ரூ.2 ஆயிரம் வாங்குவோம். அதிகபட்சம் 7 அடி வரை தயாரிப்போம். சிலைக்கு வாட்டர் கலர் மூலம்தான் வர்ணம் கொடுப்போம். இதனால் சிலையை நீரில் போட்ட சில மணி நேரத்திலேயே கரைந்துவிடும். வட மாநிலங்களிலும் சிலைகள் தயாரித்தாலும், எங்களது தயாரிப்புக்கு எப்போதும் கிராக்கி உள்ளது. தற்போது மண்பாண்டப் பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் விற்பனை அமோகமாக உள்ளது, என்று கூறினார்.