மாநில அரசுகள் ஒத்துழைத்தால், பெட்ரோல் டீசல் விலை GST-க்குள் கொண்டுவரப்படும் – நிதி அமைச்சர்

nirmala sitharama

சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை அறிவித்தார். ஆனால் இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியின் ராகுல் காந்தி அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் என்றபோதும் அதில் ஒன்றும் இல்லை என்றும்.

நாட்டின் மிக பெரிய பிரச்சனையாக விளங்கும் வேலை இல்லா திண்டாடத்திற்கு எந்த பதிலும் கூறப்படவில்லை என்றும் அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசுகள் ஒத்துழைத்தால், பெட்ரோல் டீசல் விலை GST-க்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை MRC நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் LIC பங்குகளை எவ்வளவு விற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறினார்.

IPO வழியாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, நிர்வாக சீர்த்திருத்தத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார். மக்கள் கைகளில் பணம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பதால் தான் வரிகுறைப்பு செய்கிறோம் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் விவசாயத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக சொல்வதை ஏற்க முடியாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சாதனை செய்யவேண்டும் என்பதற்காக பட்ஜெட் தாக்கலின் போது நீண்ட நேரம் உரையாற்றவில்லை என்றும், தேவை இருந்ததால் பேசினேன் எனவும் கூறினார்