வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை – தமிழக அரசு

தமிழகத்திற்கு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதில் 964 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் அந்நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 23,495-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  1. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
  2. வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
  3. மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்.
  4. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.