சென்னை விமான நிலையத்தை புறக்கணிக்கும் தமிழக பயணிகள்…!

COVID-19 தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை, அரசாங்கம் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது.

“வந்தே பாரத் மிஷன்” என்னும் சிறப்பு திட்டம் மூலம் இந்தியா திரும்பும் பயணிகளுக்கு அந்தந்த விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த பயணிகள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் இடங்களில் 14 நாட்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 11.7 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!

இருப்பினும், இதில் பயணம் செய்வதற்கு 96 மணிநேரத்திற்கு முன்பு கிருமித்தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவை இல்லை என்று சுகாதார துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விமான நிலையங்கள் செயல்படுத்தினாலும், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் செயல்படுத்த மறுக்கின்றன என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், அந்ததந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப நடைமுறைகளை அமைத்து கொள்ளலாம் என்ற சுகாதார துறையின் கூற்றையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், சென்னை வரும் சிறப்பு விமான பயணிகள் தங்களுக்கு தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்தும், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுகின்றனர், இதற்கு எதிராக பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன் காரணமாக பயணிகள் சிலர் வேறு நகரங்களுக்கு வந்து, பின்னர் உள்நாட்டு விமானம் அல்லது சாலை வழியாக சென்னை செல்வதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg