ராயல் சல்யூட் வைக்கலாம் – இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு பாகிஸ்தான் பல்கலையில் மரியாதை!

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் (The Government College University Lahore) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஹர் கோபிந்த் குரானாவின் பெயரில் ஆய்வு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

லாகூர் பல்கலைக்கழக அரசுக் கல்லூரியின் துணைவேந்தர் அக்சர் ஜைதி வெளியிட்ட அறிவிப்பில், “பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் நோபர் பரிசு பெற்ற விஞ்ஞானியுமான ஹர் கோபிந்த் குரானா பெயரில், வேதியியல் துறையில் ஆய்வு இருக்கை உருவாக்கப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் ‘கற்பழித்து கொலை’ வழக்குகள் – என்சிஆர்பி புள்ளி விவரத்துடன் அறிக்கை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியுமான ஹர் கோபிந்த் குரானாவுக்கு 1968ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

குரானா 1922ஆம் ஆண்டு பஞ்சாப் முல்தான்(தற்போது பாகிஸ்தானில் உள்ள) பகுதியில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார். தன்னுடைய கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த குரானா அதன்பின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார்.

1945ஆம் ஆண்டு வேதியியல் பிரிவில் முதலிடம் பெற்ற குரானா அதன்பின் இங்கிலாந்தின் லீவர்புல் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சுவீட்சர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வினை மேற்கொண்ட குரானா 1949ல் மீண்டும் இந்தியா திரும்பினார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றிய இவர், மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார்.

மூலக்கூறு உயிரியலில் குரானாவின் பங்களிப்பை பாராட்டி இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. தன் வாழ்நாளை மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்காக அர்ப்பணித்த குரானா இறுதியில் 2011ம் ஆண்டு உயிர் நீத்தார்.

குழந்தையை பள்ளிக்கு அனுப்பினால் தாய்மார்களுக்கு ரூ.15,000 – ஆந்திர முதல்வரின் அட்டகாசமான திட்டம்