இந்திய பெண்னை மணந்தார் பாகிஸ்தான் ஹசன் அலி !!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி மற்றும் இந்தியாவை சேர்ந்த ஷமியா திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

ஷமியா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் பொறியியல் படித்தவரான ஷமியா தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஷாமியாவின் பெற்றோர் துபாயில் வசித்து வருகின்றனர்.

இதற்கு முன் இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியின் திருமணம் தற்போது நடைபெற்றுள்ளது. அசன் அலியின் திருமணத்துக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய பெண் ஷமியாவை திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.