அரசின் முடிவுக்கு பின் விமான முன்பதிவை துவக்கலாம் – அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவுறுத்தல்

அரசாங்கத்தின் முடிவுக்கு பின்னர் உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகளின் முன்பதிவை தொடங்குமாறு விமான நிறுவனங்களுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவுத்தியுள்ளார்.

“உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகைகள இயக்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்பதையம் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, மே 4 முதல் படிப்படியாக விமான சேவைகள் துவக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது பொது முடக்கத்தை மே.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவித்த அதே நாளில் தான் இன்டிகோ விமான நிறுவனத்தின் அறிக்கையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மே 4 முதல் தேந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவையும், ஜூன் 1 முதல் சர்வதேச விமான சேவையும் நடைபெறும் என்று ஏர் இந்தியா அறிவித்திருந்தது. தனியார் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் முன்பதிவு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உதவும் வகையில், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய மருத்துவ சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளும் உயிர்காக்கும் உடான் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக பயணிகள் விமான சேவைகள் இந்த பொது முடக்க காலத்தில் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏப்ரல் 30 வரை தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான முன்பதிவு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 3-ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவைகள், முறையே மே 3 மற்றும் மே 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக ஏப்ரல். 18ம் தேதி ஏர் இந்தியா அதிகாரிகள் அறிவித்தனர்.

இவ்வேளையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி-ன் இந்த பதிவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.