பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி சிங்கப்பூர் குடியுரிமை பெற விண்ணப்பம்??

பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் துணையோடு பல ஆயிரம் கோடியை மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, தான் மோசடி வழக்கில் சிக்கப்போவது முன்கூட்டிய தெரிந்துகொண்ட நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறத் திட்டமிட்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த பணத்தை நீரவ் மோடி ஸ்மார்ட்டாக யோசித்துத் தனது தங்கை கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.

சிங்கப்பூர் குடியுரிமை குளோபல் இன்வெஸ்டார் ப்ரோகிராம் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிங்கப்பூரில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதன் மூலம் சிங்கப்பூர் குடியுரிமை பெற முடியும்.

powered by Rubicon Project இதே வழியில் நீரவ் மோடி தான் மாதம் 1,50,000 சிங்கப்பூர் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 75 லட்சம் சம்பளம் பெறுவதாகக் கூறி தனக்கும் தன் குடும்பத்திற்கும் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளார்.

ஜனவரியில் நீரவ் மோடி விண்ணப்பித்தக் காலத்தில் தான் சிபிஐ வங்கி மோசடி குறித்து இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையாகச் சிங்கப்பூர் நீரவ் மோடிக்குக் குடியுரிமை வழங்க மறுத்தச் செய்து தற்போது வெளியாகியுள்ளது.

தகவல் : தமிழக ஊடகங்கள்