சென்னை ஏர்போர்ட்டில் இருந்து புது வாகனம் இயக்கம் – இனி குறையும் தொல்லை

chennai airport

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, பயணிகள் வசதிக்காக கூடுதலாக ‘டெம்போ டிராவலர்’கள் இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பம்மல், பல்லாவரம் பகுதிகளில் இருந்து, விமான நிலைய மெட்ரோ நிலையம் வழியாக, அதிகமானோர் பயணம் செய்ய வருகின்றனர். இதில், பம்மல் மற்றும் மெப்ஸ் ஆகிய இரண்டு வழித்தடங்களில் இருந்து வருவோரின் வசதிக்காக, ‘மேக்சி கேப்’ வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

“என் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும்” – வரதட்சணை கேட்ட தமிழக உதவி கலெக்டர்

இடநெருக்கடி மற்றும் ‘பீக் ஹவர்’களில் ஒரு வாகனத்தில் பயணியர் நிரம்பினால், மற்றொரு வாகனம் வரும் வரை, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், பயணிகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, பம்மல் மற்றும் மெப்ஸ் வழித்தடங்களில், கூடுதலாக, ‘டெம்போ டிராவலர்’ இயக்க வேண்டும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கோரிக்கை வந்தது.

தொடர்ந்து, இந்த இரண்டு வழித்தடங்களிலும், ஏற்கனவே உள்ள ‘மேக்சி கேப்’ வாகனங்களுடன், இரண்டு டெம்போ டிராவலர்கள் இயக்கப்படுகின்றன. அதேநேரம், டெம்போ டிராவலரில், ஒருமுறை பயணிக்க, பயணி ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை, 15 ரூபாயாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், இந்த வாகனங்களை சிட்லபாக்கம் மற்றும் அஸ்தினாபுரம் பகுதிகளுக்கும் சேர்த்து இயக்க வேண்டும் எனவும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஏர்போர்ட்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் – எம்.பி. தயாநிதிமாறன் கடிதம்