இந்தியாவில் அதிகரிக்கும் ‘கற்பழித்து கொலை’ வழக்குகள் – என்சிஆர்பி புள்ளி விவரத்துடன் அறிக்கை

2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் அதிகமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, 2017 உடன் ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படும் வழக்கு வழக்குகளில் 31% அதிகரித்துள்ளது.  என்.சி.ஆர்.பி இத்தகைய ஒப்பீட்டு தரவுகளை அளிப்பது இதுவே முதன் முறையாகும். இது 2017ல் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்குகளின் தரவுகளை மட்டுமே சேகரிக்கத் தொடங்கியது 2017. இதுபோன்ற வழக்குகள் முன்னர் கொலை என பதிவு செய்யப்பட்டன.

குழந்தையை பள்ளிக்கு அனுப்பினால் தாய்மார்களுக்கு ரூ.15,000 – ஆந்திர முதல்வரின் அட்டகாசமான திட்டம்

2017 ஆம் ஆண்டில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 223 வழக்குகளில் இருந்து, இந்த எண்ணிக்கை 2018ல் 291 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் அதிகபட்சமாக 66 ஆக பதிவாகியுள்ளது, மத்தியப் பிரதேசம் (46), உ.பி. (41) மற்றும் ஹரியானா (26) என்று எண்ணிக்கை கொண்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் உ.பி.யில் இதுபோன்ற 64 வழக்குகள் இருந்தன, அசாம் (27), மகாராஷ்டிரா (26), மத்தியப் பிரதேசம் (21) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

“இது ஏன் நடக்கிறது என்று சொல்வது கடினம். பாலியல் பலாத்காரத்திற்க்கான தண்டனைக்கு மரண தண்டனை அளிப்பது என்பது, குற்றவாளியை பாதிக்கப்பட்டவரை கொல்ல தூண்டுகோலாக அமைகிறது. ஆனால் நம்பிக்கையுடன் இதற்கான முடிவை எட்டுவதற்கு வலுவான தரவுகளைக் கொண்டிருக்க எங்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்” என்று போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டில் பெண்கள் மீது 33,000 க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2017 ல் 32,559 என்ற எண்ணிக்கையை விட விட சற்றே அதிகமாகும்.

2018 ஆம் ஆண்டில் குற்றங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர். ஒட்டுமொத்த குற்ற விகிதம் (ஒரு லட்சம் மக்களுக்கு குற்றங்கள் என்ற அளவில்) 2018 இல் குறைந்துவிட்டாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் அதிகரித்தது. ஒட்டுமொத்த குற்ற விகிதம் 2017 ல் 388.6 லிருந்து 2018 ல் 383.5 ஆக குறைந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 57.9 லிருந்து 58.8 ஆகவும், குழந்தைகளுக்கு எதிரான குற்ற விகிதம் 28.9 முதல் 31.8 ஆக அதிகரித்துள்ளது.

உ.பி. போன்ற ஒரு மாநிலத்தில் எப்போதும் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் இருக்கும், ஆனால் அதிக மக்கள் தொகை இருப்பதால் அதன் குற்ற விகிதம் குறைவாக உள்ளது. அதிக குற்ற விகிதம் எப்போதும் மோசமான சட்டம் ஒழுங்கைக் குறிக்காது. காவல்துறை எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்ய மறுக்கும் எண்ணிக்கையை விட, எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்து, குற்றங்களை காட்டும் விகிதம் அதிகமாகும்.

2018 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2017 ல் 3,59,849 ஆக இருந்ததை விட 7% அதிகரித்து 3,78,277 ஆக இருந்தன. உ.பி. (59,445), மகாராஷ்டிரா (35,497), மேற்கு வங்கம் (30,394) என்ற எண்ணிக்கையில் உள்ளன. அசாம் (166), டெல்லி (149) ஆகியவை பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகமாக உள்ளன.

பெண்களுக்கு எதிரான பெரும்பான்மையான குற்றங்கள் ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால்’ (31.9%) ஏற்படுகிறது. அதன்பிறகு ‘பெண்கள் மீதான தாக்குதல்’ (27.6%), ‘பெண்களைக் கடத்தல்’ (22.5%) மற்றும் ‘கற்பழிப்பு’ (10.3%) ஆகிய குற்றங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. “ஒரு லட்சம் பெண்களில் குற்ற விகிதம் 2018 ல் 58.8 ஆக உள்ளது, இது 2017 ல் 57.9 ஆக இருந்தது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

பொங்கல் பண்டிகை: கனடா டூ சென்னை விமான கட்டணம் எவ்வளவு தெரியுமா?