“திங்கள்கிழமைதோறும் மஸ்கட்டில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Photo: Wikipedia

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திங்கள்கிழமைதோறும் மஸ்கட்டில் (Muscat) இருந்து பெங்களூருவுக்கு (Bengaluru) நேரடி விமான சேவை வழங்கப்படும். வரும் மார்ச் 20- ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24- ஆம் தேதி வரை விமான சேவை வழங்கப்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 818 என்ற விமானம் இயக்கப்படும் இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதாலும், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்து வருவதாலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சிங்கப்பூர், மலேசியா, தோஹா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. அதேபோல், உள்நாட்டு விமான சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.