தென் அமெரிக்க சிகரத்தை எட்டி இளம் வயதில் சாதித்த இந்திய மாணவி

kaamya karthikeyan youngest climb summit mt aconcagua
kaamya karthikeyan youngest climb summit mt aconcagua

Mumbai girl Kaamya Karthikeyan becomes youngest to climb summit Mt Aconcagua :  மும்பையை சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற மாணவி நேவி சில்ட்ரன் ஸ்கூலில் (Navy Children School (NCS)) படித்து வருகிறார்.

‘வணக்கம்’ சொன்னால் விலகிச் செல்லும் கிருமிகள்!

இந்த மாணவி தென் அமெரிக்காவில் இருக்கும் மிக உயர்ந்த மலைச்சிகரமான அக்கோன்காகுவாவில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சிகரத்தின் உயரம் 6962 மீட்டர்கள் ஆகும். ஆசியாவிற்கு வெளியே இருக்கும் மிக உயரமான சிகரம் இதுவாகும்.

Mumbai girl Kaamya Karthikeyan, summit Mt Aconcagua

பிப்ரவரி 1ம் தேதி இந்த சிகரத்தை அடைந்த மாணவி காம்யா அங்கு நம் நாட்டின் மூவர்ண கொடியை நட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்தார். காம்யாவின் இந்த வெற்றி குறித்து கப்பற்படை குடியிருப்பில் இருப்பவர்கள் “வெகுநாட்களாக காம்யா இந்த இலக்கிற்காக அயராது உழைத்திருக்கிறார்.

ஏமாற்று விளம்பரங்களுக்கு 5 ஆண்டு சிறை – புதிய சட்ட திருத்தம்

மன அளவிலும் உடல் அளவிலும் தன்னை இத்தனை ஆண்டுகளாக தயார்படுத்தி வந்தார்” என்று கூறியுள்ளனர்.  மும்பையை சேர்ந்த இந்த மாணவி உலகிலேயே மிகவும் இளம் வயதில் இந்த சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.