கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவருடைய 2 மகன்களின் கல்வி செலவு அனைத்தையும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்றார்.!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சென்ற வாரம் கேரள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ரசாக் அக்கிப்பரம்பில் என்பவருடைய 2 மகன்களின் கல்வி செலவு அனைத்தையும் ஏற்றார்.

ரசாக் மைத்துனர் சரீப் கூறுகையில், மோகன்லால் அவர்களின் தொண்டு நிறுவனம் விஸ்வஸிந்தி குழு ரசாக் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, அவர்களின் உடனடி கடன்களை தீர்க்க தேவையான 1 லட்சம் ரூபாய் வழங்கியது, என்று கூறினார்.

மோகன்லால், ரசாக்கின் 2 மகன்களான அலாவுதீன் மற்றும் அமீன் இருவரிடம் தொலைபேசி வாயிலாக உரையாடல் நடத்தினார். அவர்களின் தேவையை குறித்து விசாரித்தாக சரீப் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

ரசாக்கின் மூத்த மகன் 11 ஆம் வகுப்பும், இளைய மகன் 9 வகுப்பும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.