இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவையை வழங்குகிறது மலிண்டோ ஏர்?- விரிவான தகவல்!

Photo: Trichy International Airport

மலிண்டோ ஏர் விமான நிறுவனம் (Malindo Air), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. எந்தெந்த நகரங்களில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

‘திருச்சி, மணிலா இடையேயான ஏர் ஏசியாவின் விமான சேவை’- விரிவான தகவல்!

அமிர்தசரஸ், பெங்களூரு, மும்பை, திருச்சி, கொச்சி, டெல்லி, கொல்கத்தா ஆகிய ஏழு நகரங்களில் இருந்து கோலாலம்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில், குறிப்பாக திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் மலிண்டோ ஏர், திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு ரூபாய் 9,047 கட்டணத்திலும், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ரூபாய் 8,664 கட்டணத்திலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற இந்திய நகரங்களிலிருந்து கோலாலம்பூருக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் இருந்து கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து இந்திய நகரங்களுக்குமான மலிண்டோ ஏர் விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை, குவைத் இடையேயான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை குறித்த முழுமையான தகவல்!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.malindoair.com/in/ என்ற மலிண்டோ ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.