“சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள்” – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்..!

சீன நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மகாபலிபுரத்தை சிங்கப்பூர் போல் மாற்றி விட்டார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இடைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அச்சமயம், இந்த சீன அதிபர் வருகை பற்றி அவர் பேசினார், “அதில் மாமல்லபுரம் சுத்தமான நகரமாக மாறிவிட்டது. இதைச் செய்வதற்காக அரசு இயந்திரங்கள் வேகமாக செயல்பட்டது. வெளிநாட்டு தலைவர்கள் தமிழகம் வருகிறார் என்றதும் மகாபலிபுரத்தை மூன்று நாட்களில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த சுறுசுறுப்பு சீன அதிபர் வருகைக்காக மட்டுமே, இல்லை என்றால் தமிழகத்தில் எங்கும் இப்படி சுத்தம் செய்திருக்க மாட்டார்கள் என்று தமிழக அரசை விமர்சனம் செய்தார்.