மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா இனி சிங்கப்பூரிலும்…!

தமிழகத்தில் இருந்து முருக்கு, கடலை மிட்டாய், பால்கோவா போன்ற பாரம்பரிய சிற்றுண்டி உணவுகள் மற்றநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மதுரை ஜிகர்தண்டாவிற்கும் வெளிநாட்டு மவுசு அதிகரித்துள்ளது. மதுரையில் பல உணவு பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் வெளியூரிலிருந்து வரும் மக்களை ஈர்ப்பதில் ஜிகர்தண்டாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

இதையும் படிங்க : COVID-19; மேலும் இரண்டு புதிய நபர்களை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

இந்திய பாரம்பரிய இனிப்பு பண்டங்களுக்கு மற்ற நாடுகளில் அதிக தேவை இருப்பதாக சுங்க அனுமதி முகவர் எஸ்.தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரைக்கே பெருமையான ஜிகர்தண்டா தற்போது சிங்கப்பூர் மக்களை கவர்ந்துள்ளது.

சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் வியாபாரிகள், புகழ்பெற்ற ஜிகர்தண்டாவின் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். FSSAl சான்றிதழ் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து, முதல் தடவையாக சோதனை முறையில் சுமார் 135 கிலோ சிங்கப்பூருக்கு நேற்று புதன் அன்று வந்தடைந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய விதிமுறை மீறல்; தனது PR தகுதியை இழந்த ஆடவர்..!