சீரும் பிலிப்பைன்ஸ் டால் எரிமலை – 286 விமானங்கள் ரத்து

Image Credit - ANI
Image Credit - ANI

பிலிப்பைன்ஸில் டால் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 286 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், “பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ள டால் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் எரிமலையிலிருந்து லாவா குழம்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 286 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி பயிற்சி வகுப்பு – வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வம்சாவளி வீரர்

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுமார் 8,000 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

எரிமலை வெடிப்பு காரணமாக காற்று மாசு எற்பட வாய்ப்புள்ளதால் வெளியில் பயணிக்கும் மக்கள் அனைவரையும் முகமூடி அணிந்து செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

டால் எரிமலை கடைசியாக 1977 ஆம் ஆண்வு வெடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. 1911 ஆம் ஆண்டு டால் எரிமலை வெடித்ததில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். விவாசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ராயல் சல்யூட் வைக்கலாம் – இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு பாகிஸ்தான் பல்கலையில் மரியாதை!