புதுடெல்லியில் நடைபெற்ற SIAC உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் அமைச்சர் K.சண்முகம் கலந்துகொண்டார்!!

இந்திய பயணத்தின் இரண்டாவது கட்டமாக கடந்த 4 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற SIAC உச்சி மாநாட்டில் சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் k. சண்முகம் கலந்துகொண்டார்.

இந்த SIAC இந்திய உச்சி மாநாட்டில், ஆசியாவின் எதிர்கால முதலீட்டாளர்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்திய முதலீட்டு வளர்ச்சி, சர்வதேச வணிகம் மற்றும் சிங்கப்பூரின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

இதில், நீதித்துறை மற்றும் சர்வதேச நடுவர் சமூகத்தின் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்குப்பெற்றனர்.

கூடுதலாக, சிங்கப்பூர் சிம்போசியத்தில் புவிசார் அரசியல் முன்னேற்றம் குறித்து சண்முகம் அவர்கள் பேசினார்.

மேலும், நிஜாமுதீன் தர்காவைப் பார்வையிட்ட சண்முகம், தர்கா பாதுகாவலர் சையத் முகம்மது சல்மி நிஜாமியுடன் கலந்துரையாடினார்.